நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்; மேலுாரில் போக்குவரத்து போலீசார் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பஸ் ஸ்டாண்ட் முன்பு துவங்கிய ஊர்வலத்தை டி.எஸ்.பி., சிவகுமார் துவக்கி வைத்தார். போக்குவரத்து போலீசார், டூவீலர் பழுது நீக்குவோர் சங்கத்தினர் நுாற்றுக்கு மேற்பட்டோர் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஹெல்மெட் அணிவதன் அவசியம், முதலுதவி, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கலையரசி, எஸ்.ஐ., ஜெயபாண்டி பங்கேற்றனர்.

