ADDED : ஜன 28, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கிடாரிப்பட்டி லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சேர்மன் மாதவன், தாசில்தார் செந்தாமரை தலைமை வகித்தனர். துணைத் தாசில்தார் லட்சுமி பிரியா முன்னிலை வகித்தார். ஓட்டளிப்பதன் அவசியம் மற்றும் நுாறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என தாசில்தார் எடுத்துரைத்தார். முகாமில் செயல் அலுவலர்கள் முத்துமணி, பிரபாகரன், முதல்வர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வி.ஏ.ஓ., விக்னேஷ் நன்றி கூறினார்.

