ADDED : மார் 06, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் நீர்வளத்துறை அலுவலகத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் விழிப் புணர்வு முகாம் நிர்வாக பொறியாளர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.
சங்கத்தின் செயல்பாடு, வழிமுறை, அதிகாரங்கள், சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. நிர்வாகிகள் கிருஷ்ணன், ரவி, அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
