ADDED : ஜன 01, 2026 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் 'போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டி நடந்தது.
முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். பொருளியல் பேராசிரியர்கள் கோபாலசுந்தர், ஞானசவுந்தரி, வித்யா போட்டிகளை நடத்தினர். பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பேராசிரியர் ராமகிருஷ்ணன் மதிப்பீடு செய்தார். பேராசிரியர்கள் மீனா, சுப்ரமணியன், விஜயகுமார் ஒருங்கிணைந்தனர்.

