தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/விழிப்புணர்வு பயணம்

விழிப்புணர்வு பயணம்

விழிப்புணர்வு பயணம்


ADDED : பிப் 05, 2024 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2024 12:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி : உசிலம்பட்டி வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறுதானியங்களின் மதிப்பு கூட்டுதல் தொழில் நுட்பங்கள் குறித்த உள் மாநில அளவிலான கண்டுணர்வு பயணம் நடந்தது.

உசிலம்பட்டி, செல்லம்பட்டி, கல்லுப்பட்டி வட்டாரங்களில் இருந்து விவசாயிகள் கோயம்புத்துார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்றனர். நிலைய தலைவர் செல்வகுமார், இணை பேராசிரியர் சத்தியசீலா, திண்டுக்கல் தனியார் நிறுவனத்தின் கயல்விழி சிறுதானிய சாகுபடியில் நவீன தொழில்நுட்பம், மதிப்புகூட்டி விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் குறித்து விளக்கமளித்தனர்.

ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜோதிலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜேந்திரன், ராஜகோபாலன் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us