UPDATED : அக் 15, 2026 06:39 PM
ADDED : அக் 15, 2026 06:37 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் சவுராஷ்டிரா கல்லுாரியின் உள் தர மதிப்பீட்டு மையம், சுற்றுச்சூழல் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நாடகம் நடந்தது.
ரயில்வே அதிகாரிகள் இம்மானுவேல் ஜோசப், கிருஷ்ணன், ரேச்சலின் ஜெனிலா, கார்த்திகை வேணி, கல்லுாரி தாளாளர் குமரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார்.
‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளில் 2ம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவர்கள் நாடகம் நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஸ்ரீபூ கலாசார மைய நிறுவனர் ராமகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தார். கல்லுாரி சுற்றுச்சூழல் இயக்க நிர்வாகிகள் வெங்கடேசன், கிருஷ்ணன், கலைவாணி, ஞானகுரு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
