ADDED : ஆக 27, 2026 01:18 AM

அ நிறம் | அளவு
மதுரை: மாவட்ட போலீஸ் எஸ்.பி.தேவநாதன் உத்தரவின்பேரில், தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்த முகாம் நடந்தது. திருமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் கர்ணன் தலைமை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் சிங்காரவேலன் முன்னிலை வகித்தார். ஏ.டி.எஸ்.பி., சந்திரகுமார், குற்றப்பிரிவு டி.எஸ்.பி.நாகராஜன் ஆகியோர் சைபர் குற்றங்கள், போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து பேசினர். உணவுப் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன், நாட்டு நலப்பணித் திட் ஒருங்கிணைப்பாளர் சின்னச்சாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி உட்பட பலர் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் தீபா நன்றி கூறினார்.
