ADDED : செப் 06, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் உச்சப்பட்டி கிராமத்தில் ஊட்டச்சத்து, சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பெண்களுக்கு ரத்த சோகை காரணங்கள், தடுக்கும் வழிமுறைகள், இரும்பு சத்து நிறைந்த உணவுப் பொருள்களை உணவில் எடுத்துக் கொள்ளும் அவசியம், தனிநபர் சுகாதாரம், சமச்சீர் உணவின் அவசியம் குறித்தும் கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேராசிரியர்கள் அபிநயா, ரேணுகா தேவி ஒருங்கிணைத்தனர்.
