ADDED : ஜன 31, 2025 12:22 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி; வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம், போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வாகன ஓட்டிகள் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிய வலியுறுத்தி டூ வீலரில் ஊர்வலமாக சென்றனர். சாலை பாதுகாப்புத் திட்ட தாசில்தார் பார்த்திபன் துவக்கி வைத்தார். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு ஹெல்மெட்டின் அவசியம் குறித்து அறிவுறுத்தப்பட்டது. வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா, இன்ஸ்பெக்டர்கள் வளர்மதி, விவேகானந்தன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
