ADDED : ஜூன் 12, 2025 02:11 AM
அ நிறம் | அளவு
எழுமலை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 70வது வங்கி தினத்தை முன்னிட்டு எம்.கல்லுப்பட்டி எஸ்.பி.ஐ., பணியாளர்கள், டி.இ.எல்.சி., பள்ளி, டி.கிருஷ்ணாபுரம் அரசு பள்ளி மாணவர்கள், டிஜிட்டல் சகி தொண்டு நிறுவனத்தினர் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
கிளை மேலாளர் வசந்தி, உதவி மேலாளர் விக்னேஷ், பணியாளர்கள் ராஜேஸ்வரி, செல்வராணி, தலைமை ஆசிரியர்கள் சந்திரசேகர், மலர்கொடி, வி.ஏ.ஓ., பாண்டியராஜன் பங்கேற்றனர்.
