ADDED : ஆக 25, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தானில் ரோலர் ஸ்கேட்டிங் கிளப், பவர் பிரைமரி பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடந்தது.
விழிப்புணர்வு பதாகைகளை அணிந்து ஸ்கேட்டிங் செய்தபடி மாணவர்கள் தென்கரையிலிருந்து சோழவந்தானுக்கு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பா.ஜ., மண்டல் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். தாளாளர் ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார். ஸ்கேட்டிங் பயிற்சியாளர் அய்யப்பன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.