ADDED : டிச 31, 2025 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: டூவீலர் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மதுரையில் போக்குவரத்து போலீசார், 6வது சிறப்பு பட்டாலியன் படை போலீசார் சார்பில் விழிப்புணர்வு டூவீலர் பேரணி நடந்தது. துணைகமிஷனர் எஸ். வனிதா துவக்கி வைத்தார்.
ரிசர்வ்லைனில் இருந்து புறப்பட்டு ஆத்திக்குளம், நாராயணபுரம், அய்யர்பங்களா, யாதவர் கல்லுாரி வரை சென்று மீண்டும் வந்த வழியில் திரும்பி ரிசர்வ்லைனில் பேரணி முடிந்தது. பட்டாலியன் எஸ்.பி., ஆனந்தன், உதவி தளவாய்கள் சுந்தர ஜெயராஜ், மான்சிங், போக்குவரத்து துணைகமிஷனர் இளமாறன், இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, பஞ்சவர்ணம் பங்கேற்றனர்.

