UPDATED : அக் 07, 2026 06:32 PM
ADDED : அக் 07, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி:
கருங்காலக்குடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வஞ்சிநகரம் பாலாஜி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
கொட்டாம்பட்டி எஸ்.ஐ., கண்ணன் துவக்கி வைத்தார். குழந்தை தொழிலாளர்களை தவிர்ப்பது, சாலை விதிகளை கடைபிடிப்பது, கல்வி மற்றும் மரம் வளர்ப்பின் அவசியம், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
