UPDATED : அக் 15, 2026 06:18 PM
ADDED : அக் 15, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
மேலுார்: ஆட்டுக்குளம் விலக்கில் செயல்படும் மகாத்மா காந்தி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மேலுார் பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலத்தில் சாலை விதிகளை கடைபிடிக்கவும், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் மாணவர்கள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., தினகர், போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் ஜெயபாண்டி, பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.
