ADDED : நவ 26, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி:
நாட்டின் சட்ட நாளை முன்னிட்டு உசிலம்பட்டியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வழக்கறிஞர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சார்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா துவக்கி வைத்தார். சட்டம் அனைவருக்கும் சமம், பாலியல் துன்புறுத்தல், தீண்டாமை ஒழிப்பு, முதியோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
