ADDED : பிப் 26, 2024 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : கிடாரிப்பட்டியில் இந்தியல் ஆயில் கார்ப்பரேஷன் மதுரை நிறுவனத்தின் பைப்லைன்ஸ் டிவிஷன் சார்பாக சென்னை - மதுரை குழாய் பாதையில் அவசரகால பேரிடர் மேலாண்மை ஒத்திகை மற்றும் கிராமப்புற விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்தியன் ஆயில் கார்பரேஷன் முதுநிலை மேலாளர் முருகேசன், ஆர்.டி ஓ., ஜெயந்தி தலைமை வகித்தனர். மேலாளர் சுந்தர் முன்னிலை வகித்தார்.
பெட்ரோலியம் மற்றும் காஸ் குழாய்கள் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகள் பற்றி எடுத்துரைத்தனர். பொதுமக்களுக்கு தீயணைப்பு பற்றிய விழிப்புணர்வு, செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் பற்றி எடுத்துரைத்தனர்.

