ADDED : நவ 23, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரையில் தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு சார்பில் பிரதம மந்திரி வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தொழிலாளர்களை சேர்க்கும் திட்டம் குறித்த தொழிற்சங்க பிரநிதிகளின் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
வைப்பு நிதி மண்டல கமிஷனர் அழகியமணவாளன் வருங்கால வைப்பு நிதித் திட்டங்கள் குறித்தும் அதை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்தும் விளக்கினார். திட்டங்களை தொழிற்சங்கங்கள் மக்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஐ.என்.டி.யூ.சி., தலைவர் ராஜசேகரன், செயலாளர் பாலகுருசாமி, சி.ஐ.டி.யூ.சி., தலைவர் பாலசுப்பிரமணியன், பி.எம்.எஸ்., தலைவர் அன்பழகன் பங்கேற்றனர்.

