ADDED : ஏப் 08, 2026 08:29 PM
மதுரை: மதுரையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ.,) சார்பில் வாகனங்களில் தீவிபத்து நேரங்களில் பயணிகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன் ஆம்னி பஸ் தீவிபத்தில் சிக்கியதில் 19 பயணிகள் இறந்தனர். இதையடுத்து தமிழகத்தில் ஆம்னி, மினிபஸ்கள், தனியார் பஸ்களில் உள்ள ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு பஸ்களில் தீவிபத்து நேரத்தில் பயணிகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மதுரை நகரில் உள்ள மதுரை தெற்கு, வடக்கு, மத்திய அலுவலகங்கள் சார்பில் மாட்டுத்தாவணி ஆம்னி பஸ்ஸ்டாண்டில் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். ஆர்.டி.ஓ.,க்கள் சித்ரா, பாலமுருகன், கார்த்திகேயன் ஆம்னி பஸ்கள், தனியார் வாகனங்களின் ஊழியர்கள் பங்கேற்றனர். வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், முரளி ஆகியோர் தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினர்.
