ADDED : டிச 23, 2024 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது.
இதையொட்டி 18 படி பூஜையும், மூலவர் சபரி சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடந்தன. வெண்பட்டு உடுத்தி சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. புலி வாகனத்தில் நடந்த சுவாமி ஊர்வலத்தை சக்திவேல் துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது.
குருநாதர்கள் துரைராஜ், பாண்டி, பூஜை செய்தனர். ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழு தலைவர் கலைவாணன், செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் ஐயப்பன், துரை மணிகண்டன், சரவணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

