ADDED : பிப் 25, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோயிலில் பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது.
அவர் கூறியதாவது: முதல்வர்களை உருவாக்கும் இடத்தில் இருந்தவர் தினகரன். தற்போது தவறான கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவருக்கு இப்போது ஒன்றும் தெரியவில்லை. தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்புக்கு பின்பு தினகரன் நிலைமை எல்லோருக்கும் புரியும். அப்போது பசுந்தோல் போர்த்திய புலி யார் என்பது தெரியும் என்றார்.
