ADDED : செப் 11, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான பூப்பந்து போட்டி மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நடந்தது.
10 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் மதுரை லேடிடோக் கல்லுாரி அணியினர் வெற்றி பெற்று 18 வது ஆண்டாக கோப்பையை கைப்பற்றினர். முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, உடற்கல்வி இயக்குநர்கள் சாந்தமீனா, ஹேமலதா, பயிற்சியாளர் ராஜேஷ்கண்ணன் பாராட்டினர்.
