தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/அஜித்குமார் மரண வழக்கு: ஏட்டு ஜாமின் மனு தள்ளுபடி

அஜித்குமார் மரண வழக்கு: ஏட்டு ஜாமின் மனு தள்ளுபடி

அஜித்குமார் மரண வழக்கு: ஏட்டு ஜாமின் மனு தள்ளுபடி


UPDATED : அக் 10, 2026 04:44 PM

ADDED : அக் 10, 2026 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 04:44 PM ADDED : அக் 10, 2026 04:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் ஏட்டு இளையராஜாவின் ஜாமின் மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரிலிருந்த நகை திருடுபோனதாக திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை 2025 ஜூன் 27 ல் போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். சி.பி.ஐ., விசாரிக்கிறது. போலீஸ்காரர்கள் ராஜா, ஆனந்த், சங்கரமணிகண்டன், பிரபு, கண்ணன், போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன், மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ., சிவக்குமார், ஏட்டு இளையராஜா கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.

இளையராஜா மதுரை 4 வது அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி தாமோதரன் விசாரித்தார்.சி.பி.ஐ., தரப்பு: போலீஸ் ஸ்டேஷன் பொது நாட்குறிப்பில் (ஜெனரல் டைரி) ஏற்கனவே இருந்த பதிவை திருத்தி போலியான பதிவுகளை தயாரித்ததன் மூலம், அஜித்குமார் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டதை மனுதாரர் மறைக்க முயன்றுள்ளார். அஜித்குமாரின் சகோதரர் உள்ளிட்ட முக்கிய சாட்சிகளுக்கு பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கு ஜாமின் அனுமதித்தால் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தக்கூடும். சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அரசு ஆவணங்களை திருத்தி குற்றத்தை மறைக்க முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. குற்றசாட்டிற்கு முகாந்திரம் உள்ளது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us