/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சொத்து வரி விதிப்பு முறைகேடு 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
/
சொத்து வரி விதிப்பு முறைகேடு 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
சொத்து வரி விதிப்பு முறைகேடு 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
சொத்து வரி விதிப்பு முறைகேடு 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 22, 2025 05:47 AM
மதுரை: மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு தொடர்பாக கைதானவர்களில் 5 பேரின் ஜாமின் மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை மாநகராட்சி கமிஷனராக தினேஷ்குமார் இருந்தபோது சொத்து வரி வசூல் தொடர்பாக ஆய்வு நடத்தினார். 2022 மற்றும் 2023 ல் விதிகளை மீறி வரியை குறைத்து நிர்ணயித்து ரூ.பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரங்கராஜன், ஒப்பந்த ஊழியர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன், இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ் குமார், முகமது நுார் கைது செய்யப்பட்டனர்.
கைதான ஷாகா உசேன், ராஜேஷ் குமார், முகமது நுார், சதீஷ், ரங்கராஜன் ஜாமின் கோரி மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தனர். நீதிபதி சிவகடாட்சம் விசாரித்தார்.
மாவட்ட தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி: வழக்கில் இதுவரை 80 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. மேலும் 70 பேரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. கைதானவர்களின் அலைபேசிக ள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரவேண்டியுள்ளது. விசாரணை துவக்க கட்டத்தில் உள்ளது. ஜாமின் அனுமதித்தால் விசாரணை யை பாதிக்கும் என்றார்.
இதையடுத்து 5 பேரின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.