sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வாழையில் சொட்டுநீர் பாசனம் உழவர் உற்பத்தியாளர் குழு அசத்தல்

/

வாழையில் சொட்டுநீர் பாசனம் உழவர் உற்பத்தியாளர் குழு அசத்தல்

வாழையில் சொட்டுநீர் பாசனம் உழவர் உற்பத்தியாளர் குழு அசத்தல்

வாழையில் சொட்டுநீர் பாசனம் உழவர் உற்பத்தியாளர் குழு அசத்தல்


ADDED : ஜன 29, 2024 06:01 AM

Google News

ADDED : ஜன 29, 2024 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மேலவளவில் உழவர் உற்பத்தியாளர் குழுவினர் வாழையில் சொட்டு நீர் பாசனம் அமைத்து விவசாயிகளின் பொருளாதாரம், அழிவின் விளிம்பில் உள்ள வாழை விவசாயத்தையும் ஊக்குவிக்கின்றனர்.

வாழை சாகுபடிக்கு அதிகளவில் தண்ணீர் தேவைப்படும். தேவையான தண்ணீர் கிடைத்தால் மட்டுமே நல்ல வளர்ச்சியும், மகசூலும் கிடைக்கும். தற்போது தண்ணீர், பராமரிப்பு செலவு, வேலையாட்கள் பற்றாக்குறையால் வாழை விவசாயம் குறைய ஆரம்பித்துள்ளது.

உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் கோபாலன் கூறியதாவது : வாழை சாகுபடிக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் தேவை. பாத்தி கட்டும் முறையில் அதிகளவு தண்ணீர் வயல் முழுவதும் பரவி வீணாவதோடு, எல்லா மரங்களுக்கும் சம அளவில் தண்ணீர் கிடைப்பதில்லை. ஆனால் சொட்டு நீர் பாசனத்தில் வேருக்கு மட்டும் பாய்ச்சுவதால் குறைந்தளவு தண்ணீரில் அனைத்து மரங்களுக்கும் ஒரே சீராக தண்ணீர், உரம் கிடைக்கும். பயிர் உறுதியாக, ஆரோக்கியமாக, வேகமாக வளர்வதோடு மகசூலும் அதிகரிக்கிறது.

வேருக்கு மட்டும் தண்ணீர் பாய்வதால் களை வளராது. அதனால் பராமரிப்புக்கான வேலை ஆட்கள் தேவை மற்றும் செலவு மிச்சமாகும். வாழை சாகுபடியில் வாடல் நோய்க்கு ரசாயன உரத்திற்கு பதில், உயிரியல் காரணிகள் உற்பத்தி மைய உயிர் உரங்களை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்தி வருகிறோம். இதனால் குறைந்த செலவில் அதிக மகசூல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம், என்றார்.

வாழையில் நீர் மேலாண்மைக்காக, பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு நுாறு சதவீதம் மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவிதம் மனியத்திலும் உழவர் உற்பத்தியாளர் குழுவினர் சொட்டு நீர் பாசனம் அமைத்து தருகின்றனர். இக்குழுவை 94880 87588 ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us