UPDATED : ஜூலை 19, 2026 09:52 PM
ADDED : ஜூலை 19, 2026 09:52 PM
அ நிறம் | அளவு
மதுரை:நாட்டிலுள்ள வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் 57வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நலத்திட்டம் உதவிகள் வழங்கப்பட்டன.
மதுரை சேவாஸ்ரமம் நடத்தும் ஆதரவற்ற பெண் குழந்தைகள் மையத்தில், 40 குழந்தைகளுக்கு சீருடை, புத்தகப்பைகள் வழங்கப்பட்டன. உயர்கல்வி பயிலும் 10 குழந்தைகளுக்கு ஆண்டு கல்வி கட்டணம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. சங்க பொதுச் செயலாளர் குமரன், தலைவர் டேவிட், நிர்வாகிகள் காளிதாஸ், மணிகண்டன், அருண் உட்பட வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.
