ADDED : பிப் 26, 2026 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஊழியர்களுக்கு தர வேண்டிய ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி, இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்காவணி மூல வீதியில் உள்ள இந்தியன் வங்கி மண்டல கிளை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு , வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் குமரன் தலைமை வகித்தார்.
இந்தியன் வங்கியில் 2024---25 க்கான 15 நாட்கள் ஊக்கத் தொகைக்கு பதிலாக, வெறும் ஐந்து நாட்களுக்கான தொகையையே ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளனர். ரிசர்வ் வங்கி வகுத்த ஆறு வணிக ரீதியான இலக்கினை அடைந்த பிறகும் உரிய ஊக்கத்தொகை வழங்க வில்லை. ஊழியர்களுக்கு உரிய தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மாவட்ட பொறுப்பாளர் டேவிட் வினோத்குமார், நிர்வாகிகள் பிரசன்னகுமார், பிருந்தா தேவி பங்கேற்றனர்.

