ADDED : செப் 12, 2026 05:25 AM

மதுரை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துதல், காலி யிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மதுரையில் வேலைநிறுத்த ஆர்பாட்டம் நடந்தது.
மேலவெளி வீதி ஸ்டேட் வங்கி கிளை முன் நடந்த ஆர்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் குமரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி செந்தில் ரமேஷ், சங்க நிர்வாகிகள் செந்தில் குமார், காளிதாஸ், கேவிட்ஸன், சிவகுமார், டேவிட் வினோத்குமார் முன்னிலை வகித்தனர்.
வங்கிகளில் எழுத்தர், துணைப் பணியாளர்களை போதுமான எண்ணிக்கை யில் பணியமர்த்த வேண்டும். பணிக் கொடைச் சட்டத்தின் கீழ் பணிக்கொடை உச்ச வரம்பை உயர்த்துதல், அனைத்து தனியார் வங்கி களிலும் கருணைத்தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மதுரையில் 450க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளின் சேவைகள் முடங்கின.
