/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அழகர்கோயிலில் ரூ.14 கோடி செலவில் விருந்து மண்டபங்கள்
/
அழகர்கோயிலில் ரூ.14 கோடி செலவில் விருந்து மண்டபங்கள்
அழகர்கோயிலில் ரூ.14 கோடி செலவில் விருந்து மண்டபங்கள்
அழகர்கோயிலில் ரூ.14 கோடி செலவில் விருந்து மண்டபங்கள்
ADDED : ஜன 18, 2024 06:34 AM

அழகர்கோவில்: கள்ளழகர் கோயில் வளாகத்தில் ரூ.14 கோடியில் பக்தர்களின் வசதிக்காக விருந்து மண்டபங்களின் கட்டுமான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
துணை கமிஷனர் ராமசாமி கூறியதாவது: பக்தர்கள் வசதிக்காக ஒரே சமயத்தில் 23 பேர் கிடா வெட்டி விருந்து படைக்கும் வகையில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வரவேற்பு, உணவு பரிமாறும் அறை, குடிநீர் குழாய் இணைப்பு, கார் பார்க்கிங் வசதிகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவுக்கு வந்துள்ளன.
திருமண மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அதில் பெரிய வரவேற்பு அறை, உணவு பரிமாறும் இடம், மணமக்கள் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழலில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இருக்கும். விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.