/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆலமரத்திற்கு வயது 106 பாதுகாக்க வலியுறுத்தல்
/
ஆலமரத்திற்கு வயது 106 பாதுகாக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2025 03:02 AM
மதுரை : மதுரை மீனாம்பாள்புரத்தில் செல்லுார் கண்மாய் ஓடை அருகே உள்ள நுாற்றாண்டு கண்ட ஆலமரத்திற்கு நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் 106வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பேராசிரியர்கள் நாகரத்தினம், ராஜேஷ் மற்றும் ஹக்கீம், அண்ணாத்துரை, ஆசிரியர் ஹரிபாபு, மணிகண்டன், நல்லகாமன், ரஹீம், கண்ணன், சங்கரபாண்டியன், சம்சுதீன், ராஜாஜி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மரங்களை காக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர் கூறியதாவது: முன்பு இப்பகுதியில் 9 ஆலமரங்கள் இருந்தன. தற்போது ஒன்றுதான் உள்ளது. மரத்தை பராமரித்து கண் இமைபோல் பாதுகாத்து வருகிறேன். அதேசமயம் செல்லுார் தாகூர்நகர் மின்வாரியம் ஆலமரத்தை வெட்டி சேதப்படுத்துகிறது. செல்லுார் கண்மாய் ஓடை அருகே தொட்டி வைத்து குப்பையை சேகரித்து ஓடையில் எரிப்பதால் மரத்திற்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. ஆலமரத்தை பாதுகாக்க மரத்தை சுற்றி திண்ணை அமைக்க வழிவகை செய்யவேண்டும். இவ்வாறு கூறினார்.