/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கால்வாயை மறித்து மெட்டல் ரோடு தண்ணீர் இருந்தும் தரிசாகும் நிலங்கள்
/
கால்வாயை மறித்து மெட்டல் ரோடு தண்ணீர் இருந்தும் தரிசாகும் நிலங்கள்
கால்வாயை மறித்து மெட்டல் ரோடு தண்ணீர் இருந்தும் தரிசாகும் நிலங்கள்
கால்வாயை மறித்து மெட்டல் ரோடு தண்ணீர் இருந்தும் தரிசாகும் நிலங்கள்
ADDED : ஜன 15, 2024 04:18 AM

மேலுார் : மேலவளவில் தண்ணீர் வெளியேறும் கால்வாய்களை மறைத்து மெட்டல் ரோடு அமைத்துள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
மேலவளவில் ஒருபுறம் அழகிரிகுளம், விளைநிலங்கள் மறுபுறம் உள்ளது. நடுவில் புலிப்பட்டி -- சிங்கம்புணரி பெரியாறு நீட்டிப்பு கால்வாய் செல்கிறது.
அக்கால்வாயின் மேல்பகுதியில் தொட்டிப்பாலம் அமைத்து, கண்மாய் தண்ணீர் விளை நிலங்களுக்கு செல்ல கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது ஒன்றிய அதிகாரிகள் அக்கால்வாயை மூடும் வகையில் மெட்டல் ரோடு அமைத்துள்ளனர்.
உழவர் உற்பத்தியாளர் குழு சங்கத் தலைவர் கோபாலன் கூறியதாவது: கால்வாயை ரோடு அமைத்து மூடிவிட்டதால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் விளைநிலங்கள் தரிசாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்மாயில் தண்ணீர் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அதிகாரிகளிடம் கால்வாய் உள்ள இடத்தில் தடையின்றி தண்ணீர் வெளியேற சிறிய பாலம் அமைத்து தருமாறு மனுக்கள் கொடுத்தும் பலனில்லை, என்றார்.
பொறியாளர் கணேசன் கூறுகையில், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.