/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கவனமா இருங்க: குழந்தைகளை தாக்குது டைபாய்டு, மஞ்சள்காமாலை: உணவு, குடிநீர் மூலம் பரவுவதால் எச்சரிக்கை தேவை

ADDED : ஆக 08, 2024 05:07 AM

மதுரை: மதுரையில் உணவு, குடிநீர் மூலம் குழந்தைகளுக்கு டைபாய்டு, மஞ்சள்காமாலை பரவுவதாக குழந்தைகள் நல டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
மதுரையில் சில நாட்களாக டைபாய்டு, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர். தினமும் குறைந்தது 10 பேர் பாதிப்புக்குள்ளாகின்றனர். மலக்கிருமிகள் மூலம் டைபாய்டு, மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. சுகாதாரமற்ற கடைகளில் சாப்பிடும் போதோ, பாதுகாப்பில்லாத தண்ணீரை குடிக்கும் போதோ குழந்தைகள் எளிதாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து குழந்தைகள் நல டாக்டர்கள் கூறியதாவது: முதல் மூன்று நாட்கள் மருந்து கொடுத்தாலும் டைபாய்டு காய்ச்சல் குறையாது. 4, 5 வது நாட்களில் காய்ச்சல் அதிகரிக்கும். 7 முதல் 10 நாட்கள் வரை சிகிச்சை அளிக்க வேண்டும். சில நேரங்களில் நோயாளிகளின் உடல்நலனைப் பொறுத்து 2 வாரங்கள் கூட சிகிச்சை தரவேண்டும்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டால் லேசான காய்ச்சல் இருக்கும். பசியின்மை, உணவைப் பார்த்தால் குமட்டல், வாந்தி வரும். மேல் வயிற்று வலி ஏற்படும். 4, 5 வது நாட்களைத் தாண்டினால் கண்கள் மஞ்சளாக மாறும். சிறுநீர் மஞ்சளாக வெளியேறும்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் கை வைத்தியம் பார்க்கக் கூடாது. மாநகராட்சியில் சில இடங்களில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருகிறது. இதை கொதிக்க வைத்து, ஆறவைத்து குடிக்க வேண்டும். தண்ணீரின் நிறம், சுவை மாறுவது தெரிந்தால் கண்டிப்பாக கொதிக்க வைக்க வேண்டும் என்றனர்.