sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சுவையில் சுதாரிப்பா இருங்க: மதுரையில் 13 கிலோ சுத்தமற்ற மயோனைஸ் பறிமுதல்

/

சுவையில் சுதாரிப்பா இருங்க: மதுரையில் 13 கிலோ சுத்தமற்ற மயோனைஸ் பறிமுதல்

சுவையில் சுதாரிப்பா இருங்க: மதுரையில் 13 கிலோ சுத்தமற்ற மயோனைஸ் பறிமுதல்

சுவையில் சுதாரிப்பா இருங்க: மதுரையில் 13 கிலோ சுத்தமற்ற மயோனைஸ் பறிமுதல்


ADDED : மே 08, 2025 03:30 AM

Google News

ADDED : மே 08, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் ஓட்டல்களில் பச்சை முட்டையில் மயோனைஸ் தயாரித்து வழங்கிய 20 உணவு கடைகளுக்கு உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பச்சை முட்டையுடன் எண்ணெய் சேர்த்து மிக்சியில் அரைக்கும் போது வெள்ளைநிற கிரீம் போன்ற உணவு (மயோனைஸ்) கிடைக்கிறது. சமீபகாலமாக அனைத்து அசைவ உணவுகளுடன் இந்த மயோனைஸ் சேர்த்து வழங்கப்படுகிறது.

உடல்நலனுக்கு கெடுதல் என்பதால் தெலுங்கானாவில் 2024 அக்.30ல் இவ்வகை மயோனைஸ்க்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தமிழகத்திலும் கடந்த மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள ஓட்டல், ரோட்டோர உணவுக்கடைகளில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்தனர்.

20 கடைகளில் பயன்படுத்திய 13 கிலோ மயோனைஸ் உணவு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதாக மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: சுத்தம் செய்யப்படாத, கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் உணவில் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் சேர்வதற்கு வாய்ப்புள்ளது. ஏப். 25 முதல் 626 உணவு கடைகளில் ஆய்வு செய்தோம். அனைத்து கடைகளுக்கும் பச்சை முட்டை மயோனைஸ் தயாரிக்கக்கூடாது என விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கியுள்ளோம்.

அதையும் மீறி வழங்கிய 20 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி மயோனைஸ் உணவு மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.

பதப்படுத்தப்பட்ட (வேக வைக்கப்பட்ட) முட்டை அல்லது சைவ மயோனைஸ் தயாரிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் தடையில்லை. ஓட்டல்களில் பச்சை முட்டை மயோனைஸ்வழங்கினால் 94440 42322க்கு புகார் செய்யலாம்.

சித்திரை திருவிழாவின் போது பக்தர்களுக்கு அன்னதானம், குளிர்பானம், நீர்மோர் வழங்குவதற்காக 554 பேருக்கு பதிவெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us