தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாரியம்மன் தெப்பகுளத்தைச் சுற்றி மினி சுற்றுலா இடமாக மாற்றலாம்

மாரியம்மன் தெப்பகுளத்தைச் சுற்றி மினி சுற்றுலா இடமாக மாற்றலாம்

மாரியம்மன் தெப்பகுளத்தைச் சுற்றி மினி சுற்றுலா இடமாக மாற்றலாம்


UPDATED : பிப் 14, 2024 07:07 AM

ADDED : பிப் 14, 2024 04:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 14, 2024 07:07 AM ADDED : பிப் 14, 2024 04:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை மக்களுக்கு மாலையில் பொழுது போக்கு இடமாகவும், காலையில் நடைப்பயிற்சியாளர்களின் இடமாகவும் உள்ளது மாரியம்மன் தெப்பக்குளம். சில ஆண்டுகளாகவே வைகை தண்ணீர் இங்கு நிரப்பப்பட்டு வருகிறது. இக்குளத்தில் யாரும் இறங்கி விடாதவாறு நான்குபுறமும் கதவுகளை அமைத்துள்ளனர்.

சமீப காலமாக தினமும் மாலையில் குடும்பம், குடும்பமாக இங்கு மக்கள் வருகின்றனர். இங்குள்ள சுற்றுச்சுவரில் குழந்தைகளுடன் அமர்ந்து விரும்பிய உணவுகளை சாப்பிட்டு பொழுது போக்கி விடுகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு சுற்றிலும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது தேட வேண்டியுள்ளது.

கழிப்பறை வசதி இல்லாமல் நடைபாதையில் இயற்கை உபாதையை கழிக்கின்றனர். உணவு கடைகள் பல உள்ளன. இதனால் ஏராளமான குப்பையை ஆங்காங்கே கொட்டி செல்கின்றனர். முக்தீஸ்வரர் கோயில் முன்பு ஒரு குப்பைதொட்டி உள்ளது. அது நிரம்பி வெளியிலும் குப்பை கொட்டப்படுகின்றன.

இதனால் கோயிலுக்கு வருவோர் துர்நாற்றத்துடன் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தெப்பக்குளத்தை சுற்றிலும் சேர்கள், நடமாடும் கழிப்பறை, கூடுதல் குப்பை தொட்டி என வசதி செய்து தந்தால் மதுரை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us