ADDED : ஜன 28, 2026 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொழிற்கல்வி பாடப்பிரிவு படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கான 15 நாட்களுக்கான தேனீ வளர்ப்பு பயிற்சி துவங்கியது. திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். தேனீ வளர்ப்பின் நோக்கம், பயன்கள் குறித்து இணைப்பேராசிரியர் சுரேஷ், பேராசிரியர் நிர்மலா பேசினர்.
இணைப் பேராசிரியர்கள் ஆனந்த், அருளரசு, உதவி பேராசிரியர்கள் ஜோதிலட்சுமி, சரவணன் கலந்து கொண்டனர். அலங்காநல்லுார் அரசு ஆண்கள் பள்ளி, திருவாதவூர், எம்.சத்திரப்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

