/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் துவக்கம்
/
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் துவக்கம்
ADDED : டிச 17, 2025 06:39 AM
மதுரை, பிராமண இளைஞர் சங்கத்தின் ஆஸ்திக பிரசார சபா சார்பில் 61 ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு பாராயணம் மேலமாசி வீதி ஐயப்பன் கோயில் எதிரில் சம்பந்த மூர்த்தி தெரு அலுவலகத்தில் நேற்று துவங்கியது. ஜன.25 வரை தொடர்ந்து 41 நாட்கள் தினமும் மாலை 5:00 மணிக்கு பாராயணம் துவங்கும்.
ஜன.,11ல் கூடாரை வெல்லும் சீர்பாசுர விழாவும், ஜன., 16 காலை 9:00 மணிக்கு கோபூஜை, ஜன.,18 ல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயண போட்டியும் நடக்கும். ஜன.,26 காலை 8:00 மணிக்கு பேச்சியம்மன் படித்துறை காயத்ரி கல்யாண மகாலில் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
தினமும் அவரவர் நட்சத்திரங்களுக்கு சங்கல்பம் செய்து விஷ்ணு சகஸ்ரநாமம், பஞ்சாயுத ஸ்தோத்ரம், லட்சுமி அஷ்டோத்திரம், இந்தராக்ஷி சிவகவசம், லலிதா நவரத்னமாலை, மீனாட்சி பஞ்சரத்னம், திருப்பாவை, திருவெம்பாவை, வேத பாராயணம் செய்து வெங்கடேச மங்களாசாசனத்துடன் நிறைவு பெறும். பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெறுமாறு ஆஸ்திக பிரசார சபாவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

