/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பத்ரகாளியம்மன் கோயில் சிலை எடுப்பு திருவிழா
/
பத்ரகாளியம்மன் கோயில் சிலை எடுப்பு திருவிழா
ADDED : நவ 28, 2025 07:49 AM
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா கிழவனேரியில் பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா, சிலை எடுப்பு திருவிழா நடந்தது.
எட்டு நாட்கள் நடக்கும் இவ்விழாவில் விநாயகர், பெருமாள், எல்லை பிடாரி, மந்தை அம்மன், பத்ரகாளியம்மன் கோயில் என தினமும் பொங்கல் திருவிழா நடைபெறும்.
முதல் நாள் பிள்ளையார் கோயில், 2ம் நாள் பெருமாள் கோயில், 3ம் நாள் எல்லை பிடாரியம்மன், 4ம் நாள் மந்தை அம்மன் கோயில் என பொங்கல் வைத்து கிடா வெட்டி வழிபாடு நடத்தினர். பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று 7ம் நாள் திருவிழாவில் அய்யனார் கோயிலுக்கு புரவி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த பகுதி கண்மாயில் மண்ணெடுத்து குதிரை, அய்யனார் சிலைகளை செய்த கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்று அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர். அன்னதானம் நடந்தது.

