ADDED : டிச 15, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேடகம் : திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் தமிழ்த்துறை, பாரதி சிந்தனை அரங்கம் சார்பில் பாரதியாரின் பிறந்தநாள் விழா, இந்திய மொழிகள் திருவிழா முதல்வர் வெங்கடேசன் தலைமையில் நடந்தன.
செயலாளர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆகியோர் ஆசி வழங்கினர். தமிழ்த்துறை பொறுப்பு தலைவர் ராமர் பாரதி குறித்து நாட்டுப்புறப் பாடல் பாடினார். சமஸ்கிருதத் துறைத் தலைவர் ஸ்ரீதர்சுவாமிநாதன் நான் கண்ட பாரதி' தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மாணவர்கள் தரணி 'கனவு மெய்ப்பட வேண்டும்' தலைப்பிலும், யுவன்ராஜா 'பெண் விடுதலை' தலைப்பிலும், ஜெகதீசன் 'பைந்தமிழ்த் தேர்ப்பாகன்' தலைப்பிலும் பேசினர். மாணவர் சிவா பாரதியார் பாடல்களை பாடினார். உதவிப் பேராசிரியர்கள் முத்தையா நன்றி கூறினார். சுதாகர் வடிவேலு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.