/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் பாரதியார் பிறந்தநாள் விழா
/
மதுரையில் பாரதியார் பிறந்தநாள் விழா
ADDED : டிச 12, 2025 06:38 AM
மதுரை: மதுரையில் பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மரியாதை செலுத்தப் பட்டது. வடக்குவெளி வீதி சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாரதியார் சிலைக்கு அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் மரியாதை செய்தார்.
தலைமை ஆசிரியர் நாராயணன், உதவி தலைமை ஆசிரியர் அகிலாண்டேஸ்வரர், நேதாஜி தேசிய இயக்க தலைவர் சுவாமிநாதன், மாற்றம் தேடி அறக் கட்டளை தலைவர் பாலமுருகன், சமூக ஆர்வலர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
மீனாட்சி அரசு கலை கல்லுாரியில் பாரதியார் பிறந்தநாள் விழா முதல்வர் வானதி தலைமையில் நடந்தது. தமிழாய்வுத்துறை கவுரவ விரிவுரையாளர் பிரேமா வரவேற்றார். பேராசிரியர் பிரியதர்ஷினி, மாணவிகள் மஹதி, தருஷ்ணா ஆகியோர் பேசினர். மாணவி அபிநயா நன்றி கூறினார். பேராசிரியர் சந்திரா ஒருங்கிணைத்தார்.
நாகமலை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா நடந்தது. சிறார் பிரிவிற்கு முதல்வர் லதா திரவியம், மேனிலைப் பிரிவிற்கு தலைமையாசிரியர் பொற்கொடி ஆகியோர் தலைமை வகித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
திருப்பரங்குன்றம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தியாகி லட்சுமண நாயுடு ஞானம்மாள் அறக்கட்டளை, தமிழ் உயர் ஆய்வு மையம் சார்பில் நடந்த பாரதியார் பிறந்த தின விழாவுக்கு கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், உதவி செயலாளர் சுரேந்திரன், உப தலைவர் ஜெயராம், பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். மதுரை செந்தமிழ் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி பேசினார். ஆய்வாளர் சுரேஷ் தொகுத்து வழங்கினார். உதவி பேராசிரியர் முனியசாமி நன்றி கூறினார். பேராசிரியர்கள் தேவிபூமா, மல்லிகா, திருஞானசம்பந்தம் ஒருங்கிணைத்தனர்.
* ஹார்விபட்டியில் எஸ்.ஆர்.வி.மக்கள் நல மன்ற விழாவில் தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் மாலை அணிவித்தனர். பொருளாளர் அண்ணாமலை, துணைத் தலைவர் காளிதாசன், செயலாளர் குலசேகரன், செயற்குழு உறுப்பினர் வேட்டையார், நிர்வாகிகள் குப்புசாமி செல்வரங்கராஜ், தட்சிணாமூர்த்தி, துளசிதாஸ், அரவிந்தன் பங்கேற்றனர்.
திருநகர் மக்கள் மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் பொன்.மனோகரன் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். ஓய்வு போலீஸ் கூடுதல் எஸ்.பி., மணிவண்ணன் பேசினார். திருநகர் ஜெயன்ட்ஸ் குரூப் இயக்குனர் வீரக் கண்ணன், அனைத்து வியாபாரிகள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ், மன்ற தலைவர் செல்லா, நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஏற்பாடுகள் செய்தனர். டாக்டர் மணிகண்டன் நன்றி கூறினர்.
பாண்டியன் நகர் பூங்காவில் உள்ள பாரதியார் சிலைக்கு சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் மாலை அணிவித்தார். கவுன்சிலர் இந்திராகாந்தி, எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்ற தலைவர் அய்யல்ராஜ் பங்கேற்றனர்.
* தமிழக வாழ்வுரிமை கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிர்வாகிகள் முருகன், சையது இப்ராஹிம், ராமர், பொன் முனியாண்டி பங்கேற்றனர்.

