ADDED : செப் 23, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரையில் பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
மாநில துணைத் தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
அகில பாரத துணைத் தலைவர் பெருமாள், 'சங்க தேசிய பார்வை குறித்தும் தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும்' பேசினார். மாநிலப் பொதுச் செயலாளர் சீனிவாசன், ஐவகை நிலங்களில் மேற்கொள்ளப்படும் அமைப்பின் செயல்பாடுகளை விளக்கிக் கூறினார்.
அமைப்புச் செயலாளர் குமார், அமைப்பின் கொள்கைகளை விளக்கினார். அக்டோபரில் மாவட்ட மாநாடுகளை நடத்தவும், நவ.22ல் மாநில மாநாடு நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தீர்மானங்களை செயலாளர் வீரசேகரன் வாசித்தார். செயற்குழு உறுப்பினர் சீமான் நன்றி கூறினார்.