ADDED : பிப் 04, 2024 03:41 AM
திருப்பரங்குன்றம் : பாரதிய மஸ்தூர் சங்க 14வது மாநில மாநாடு திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
காலையில் நடந்த மகளிர் மாநாட்டிற்கு மாவட்ட மகளிர் அமைப்பாளர் கலா தலைமை வகித்தார். துணைத் தலைவர் லதா முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அஜிதா வரவேற்றார்.
டி.குன்னத்தூர் ஸ்ரீ கிருஷ்ண பிரம்ம முகேஷ்வரர் ஆஸ்ரமம் மணிமேகலை, தென் பாரத மகளிர் பொறுப்பாளர் ஆஷாமோள், சக்ஷம் தேசிய துணைத்தலைவர் காமாக்ஷிசுவாமிநாதன் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் பரிமளா நன்றி கூறினார்.
மாலையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அன்பழகன் வரவேற்றார். அகில பாரத துணைத் தலைவர் மல்லேசம், தென் பாரத அமைப்புச் செயலாளர் துரைராஜ், துணை அமைப்பு செயலாளர் ராஜீவன், மாநில பொதுச் செயலாளர் விமேஷ்வரன், மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் பேசினர். மாவட்ட செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
இன்று பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது.