/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பூக்குழி விழாவில் பீமன் கீசகன் வதம்
/
பூக்குழி விழாவில் பீமன் கீசகன் வதம்
ADDED : மே 04, 2025 04:11 AM

சோழவந்தான் : சோழவந்தான் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா ஏப்.28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.29 இரவு சக்தி கரகம் வைகை ஆற்றில் இருந்து கோயில் எடுத்து வந்தனர்.
ஏப். 30ல் திருக்கல்யாணம், விளக்கு பூஜை நடந்தது. மே 1 மாலை அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சயிந்தவன், துரோணாச்சாரியார் வேடமணிந்து நான்கு ரத வீதியில் பவனி வந்து கோயில் முன் சக்கர வியூக கோட்டையில் சயிந்தவன் வதம் செய்தார். மே 2, கருப்பட்டியிலும், நேற்று சோழவந்தானிலும் பீமன் வேடம் அணிந்து ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து கீசகன் வதம் நடந்தது.
மே 6 பூக்குழி கண் திறத்தல், 7, மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடக்கிறது.
மே 8ல் கொடி இறக்குதல், வைகை ஆற்றில் தீர்த்தமாடுதல், கோயிலில் அம்மன் ஊஞ்சலாடுதல் வீதி உலா நடக்கும். 9ல் பட்டாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.