ADDED : மார் 15, 2024 07:16 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார், மில்கேட்டில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், மார்க்கெட் தெருவில் ரூ.30 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கு நகராட்சி தலைவர் முகமது யாசின் தலைமையில் பூமி பூஜை நடந்தது.
இதில் நகராட்சி கமிஷனர் கணேஷ், துணைத் தலைவர் இளஞ்செழியன், கவுன்சிலர்கள் கலைசெல்வி, வசந்தா, பொறியாளர் முத்துக்குமார் கலந்து கொண்டனர்.
