நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சியின் முதல் மேயர் முத்துவின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு அழகரடியில் சிலைக்கு பா.ஜ., மண்டல தலைவர் பால்பாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பேரன்கள் முத்துச்செல்வன், இளங்கோவன், பா.ஜ., மாநில செயலாளர் கதலிநரசிங்க பெருமாள், மத்திய தொகுதி அமைப்பாளர் சசிராமன், மண்டல பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் மண்டல பொதுச் செயலாளர் சுடலை, மீனாட்சி அம்மன் கோயில் மண்டல தலைவர் பாலா, பிரசாரப் பிரிவு மாவட்ட தலைவர் தம்பி பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

