ADDED : மார் 10, 2024 03:53 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம் : மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., ஆலோசனை கூட்டம் கப்பலுார் தொகுதி அலுவலகத்தில் தலைவர் சசிகுமார் தலைமையில் நடந்தது.
தொகுதி பார்வையாளர் சக்திவேல், பொதுச் செயலாளர் சிவலிங்கம், துணைத் தலைவர் தங்கபாண்டி, செயலாளர் சின்னச்சாமி, நகரத் தலைவர் விஜயேந்திரன், மண்டல் தலைவர்கள் சரவணன், கிருஷ்ணன், பாலமுருகன் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 பிரசார வாகனங்கள் மூலம் பிரசாரங்களை தொடங்குவது என்றும், அந்த வாகனங்களில் மக்களின் குறைகளை கேட்டறியும் வகையில் குறைதீர் பெட்டி வைத்து மனுக்களை பெற்று மேலிடத்திற்கு அனுப்பி தீர்வு காண்பது என்றும், கப்பலுாரில் அமைந்துள்ள டோல்கேட்டை அகற்ற நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
