ADDED : மார் 19, 2024 06:04 AM
திருப்பரங்குன்றம் : அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
நிறுவன தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் குருசாமி (மதுரை ) , ராஜகுரு ( ராமநாதபுரம் ), ராஜாராம் (விருதுநகர்) , பாலசுப்பிரமணியன் (சிவகங்கை), சுரேஷ்குமார் (திருச்சி), ஆர். கருப்புசாமி ( தூத்துக்குடி), கே. கருப்புசாமி (தென்காசி), மகாராஜா ( திருநெல்வேலி) உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொதுச்செயலாளர் சிவலிங்கம், இந்திய பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற முன்னணி நிறுவனர் சம்பத் பேசினர்.
லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகள், விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றில் பா.ஜ. கூட்டணி வேட்பாளர்களுக்கும், பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்கவும் தேர்தல் பணியாற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
