ADDED : மார் 13, 2024 12:56 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம் : பா.ஜ., ஓ.பி.சி., அணி சார்பில் திருமங்கலம் தெற்கு ஒன்றியம் அச்சம்பட்டியில் மக்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தெற்கு ஒன்றிய தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் சசிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் வேல்முருகன், தொகுதி பொறுப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாலாஜி ஒருங்கிணைத்தார். மதுரைக்கு மீண்டும் டவுன் பஸ் இயக்க வேண்டும். சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர்.
