நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே இரும்பாடியில் பா.ஜ.,சார்பில் 'நாளைநமதே தமிழ்நாடும் நமதே' தெருமுனை பிரசாரம் நடந்தது. சக்திகேந்திர பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். மண்டல் தலைவர் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தார்.
பொருளாளர் மகாலிங்கம் வரவேற்றார். மீனவர் பிரிவு மாநில செயலாளர் முருகானந்தம் பேசினார். மாவட்ட துணைத்தலைவர் முருகேஸ்வரி, மகளிரணி செயலாளர் செல்வி, கூட்டுறவுபிரிவு செயலாளர் தேவி, மண்டல் துணைத் தலைவர்கள் குகனேஸ்வரன், ராமலிங்கம், கிளைத் தலைவர்கள் மதுரைவீரன், மருதமுத்து, சசிகுமார், தவிடன் பங்கேற்றனர்.

