தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தரமற்ற ரோடு பா.ஜ., புகார்

 தரமற்ற ரோடு பா.ஜ., புகார்

 தரமற்ற ரோடு பா.ஜ., புகார்


ADDED : மார் 27, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 5 ல், வார்டு எண் 91, 92ல் அவனியாபுரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் ரோட்டில் எஸ்.கே.ஆர்., நகர் உள்ளது. இங்குள்ள 7 தெருக்களில் ரோடு அமைக்க மாநகராட்சி டெண்டர் விட்டுள்ளது. இதனை கடந்த ஜனவரியில் முடிப்பதாக அறிவித்துள்ள நிலையில் சமீபத்தில் தார்ரோடு அமைத்தனர்.

இந்நிலையில் இந்த ரோடு தரமற்றதாக உள்ளதென பா.ஜ.,வினர் புகார் தெரிவிக்கின்றனர். பா.ஜ., ஊடகவியல் மாவட்ட தலைவர் காளிதாஸ் கூறுகையில், ''தார் ரோடு கையால் பெயர்த்தால் ஜல்லிக்கற்களும், தாரும் அப்படியே பெயர்ந்து மண்போல குவியலாக வருகிறது. தரமான ரோடாக இருந்தால் தார் இறுகி ரோடு பெயர்ந்து போகும் அளவுக்கு இருக்காது. இந்த ரோட்டை ரூ.92 லட்சம் செலவில் அமைத்ததாக கூறுகின்றனர். அதற்கான வாய்ப்பு இல்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us