UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
மதுரை: பா.ஜ.,நிர்வாகியாக இருந்த ஒரு பெண் 'பா.ஜ.,வில், ஓ.பி.சி., பிரிவு செயலராக பணியாற்றினேன். தமிழக பா.ஜ., பொதுச் செயலாளராக இருந்த கருப்பு முருகானந்தம் என்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி மனம், உடல் ரீதியாக துன்புறுத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கட்சி தலைமைக்கு புகார் அனுப்பினார். கட்சி பொறுப்பிலிருந்து கருப்பு முருகானந்தம் மற்றும் அப்பெண் நீக்கப்பட்டனர்.
பெண்ணின் புகார் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் கருப்பு முருகானந்தம் மீது வழக்கு பதிந்தனர். அவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.
