தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ த.வெ.க.,வுக்கு பா.ஜ., அழுத்தம்; அருண்ராஜ் சொல்கிறார்

 த.வெ.க.,வுக்கு பா.ஜ., அழுத்தம்; அருண்ராஜ் சொல்கிறார்

 த.வெ.க.,வுக்கு பா.ஜ., அழுத்தம்; அருண்ராஜ் சொல்கிறார்


ADDED : பிப் 21, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 06:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ''மதவாத சக்தியோடு கூட்டணி இல்லை என விஜய் கூறிய நிலையில் சி.பி.ஐ., விசாரணை மூலம் பா.ஜ., அதிக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளது'' என த.வெ.க., கொள்கைபரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்தது கட்சியின் கொள்கை முடிவு. கூட்டணிக்கு யாரும் வருவார்கள் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை. சமூகநீதியை அடிப்படையாக கொண்ட கட்சி என்பதால் அதை சொன்னோம். த.வெ.க.,வின் கூட்டணி நிலைப்பாடு குறித்து விஜய் அறிவிப்பார்.

மக்கள் கடும் கோபத்தில் உள்ள தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது தவறான முடிவு. அவர்களுக்கு தோல்வி தான் கிடைக்கும். த.வெ.க.,வுக்கு பெருகி வரும் ஆதரவை பார்த்து பயந்துதான் தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு கொண்டு வந்துள்ளது தி.மு.க.,

ஆளுங்கட்சி கூட்டங்களுக்கு உடனடியாக அனுமதி கிடைக்கிறது. ஆனால் த.வெ.க., கூட்டங்களுக்கு அனுமதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது. சேலம் கூட்டத்தில் ஒருவர் இறந்தது வருந்தத்தக்கது. அவருக்கு உடல்நலக்குறைவு இருந்தது உண்மை. இனி வரும் காலங்களில் இது நிகழாமல் பார்த்துக்கொள்கிறோம். பா.ஜ., தொடர்ந்து த.வெ.க.,வுக்கு கடும் அழுத்தம் கொடுக்கிறது. முதல் மாநாட்டிலேயே பா.ஜ.,வை கொள்கை எதிரி என துணிச்சலாக சொன்னவர் விஜய். அப்போது பா.ஜ., அழுத்தம் இல்லை. மதவாத சக்தியோடு கூட்டணி இல்லை என மிகத்தெளிவாக தெரிவித்தார் விஜய். இப்போது சி.பி.ஐ., விசாரணை மூலம் பா.ஜ., அதிக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளது என்றார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us